Saturday, May 1, 2010

அன்பு வன்னிய சொந்தங்களே !
வணக்கம் !
ஆண்டாண்டு காலமாக அடிமை பட்டு கிடந்த நாம் வாழ வேண்டும் என்பதற்காக நெல்லிக்காய் மூட்டைகலாக சிதறி கிடந்த இனத்தை ஒன்று சேர்த்து நாமும் வாழ வேண்டும் என்றால் , நாமும் ஆளவேண்டும் என்ற கோஷத்தை உயிர் மூச்சாக கொண்டு தமிழின போராளி மருத்துவர் அய்யா அவர்கள் பட்டி தொட்டிகளெல்லாம் சென்று இந்த மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி 1987ல் நம் மக்களுக்கான வாழ்வியல் ஆதாரங்களுக்கான கல்வியும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும் வேண்டி மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை அரங்கேற்றி பல கோடி சொத்துகளை இழந்து ஒன்றரை லட்சம் இளைஞர்கள் வழக்குகளுக்கு ஆளாகி கொடும் சிறை கொட்டகையில் அடைக்கபட்டும் 21 உயிர்களை
பலி கொடுத்து பெற்ற இட ஒதுக்கீட்டின் பயனை இன்று 107 சாதிகள் பயன் பெறுகின்றன. ஆனால்அவர்கள் எல்லாம் வன்னிய சமுதாயத்திற்கு நேர்மையாகவும் நன்றி உள்ளவர்களாகவும் இருக்கின்றர்களா வந்தவர்களை எல்லாம் வாழ வைத்த பெருமை பாட்டாளி மக்கள் கட்சிக்கும் வன்னிய சமுதாயத்திற்கும் உண்டு . ஆனால் மாற்று சமுதாயத்தை சேர்ந்த தமிழ் சாதி மக்கள் நம்மை எதிரிகளாக என்னுகிறார்கள். நாம் யாருக்கும் எதிரிகள் அல்ல. அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் மத நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு தமிழகம் முழுவதும் பல மாநாடுகளும், இன ஒற்றுமைக்காக நடத்திய பெருமை பாட்டாளி மக்கள் கட்சிக்கே உண்டு.