பின் தங்கிய சமூகத்தை முன்னேற்ற எண்ணினால்
முதலில் அந்த சமூக மக்களுக்கு
தரமான கல்வியை கொடு
அந்த கல்வி அவர்களுக்கு எல்லாவற்றையும் தரும்.
விடியுமோ எங்கள் வானம் என்று
கண்ணீர் வடித்த ஒரு சமூகத்தையே
வெற்றிபடியின் மீது ஏற்றியது எங்கள்
சமூக நீதி காவலர் அய்யா பெற்று தந்த
இட ஒதுக்கீடு கல்வி
அடிமையாக கிடந்த அந்த சமூகத்தை
ஆளுமை பெற்று ஆளசெய்தது இந்த இட ஒதுக்கீட்டு கல்வி
நெடுங்கால பெண் அடிமை நெருடல் சங்கிலியை
நெருப்பு குழம்பால் உருக்கி உடைத்தது இந்த இட ஒதுக்கிட்டு கல்வி
வருங்காலமே இல்லை என்று வாடிய வறியவனையும்
வானில் சிறகடித்து பறக்க செய்தது இந்த
இட ஒதுக்கிட்டு கல்வி
அன்று இட ஒதுக்கீட்டை பெற்று தந்த அய்யா
இன்று வேலை வைப்பு கல்வியை கற்றுத்தர
ஆணையிட்டுள்ளார்
இலவச கல்வி என்பதில் தரமிருக்காது
இதுவரை சமூகம் கண்டது
என் இன மக்களுக்காக நான்
தரவிருக்கும் இலவச கல்வி
உயர்தரமானது இது பாட்டளிகளின் பட்டறை
பகல் வேஷகரர்களின் கொட்டகை அன்று
கல்வி என்பது வியாபாரம் அன்று
கல்வி கூடங்கள் எல்லாம் சந்தையும் அன்று
கல்வி என்பது வாழ்வாதாரம்
கல்வி கூடங்கள் எல்லாம் வாழ்வியல் கூடங்கள்
வருங்காலமே இல்லை என்று வாடாதே இளைஞனே
நெடுந்தூர வெற்றி பயணம்
நீ நினைத்தால் உன் வாசலில் துவங்கிடும்
உன் உயர்விற்கு உதவிட
பாட்டளிகளின் கரங்கள் உண்டு.
அய்யாவின் ஆணைகிணங்க ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்காக அரசு வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தை துவக்கியுள்ளோம். பயிற்சி பெற்று பயன் பெற வாழ்த்துகிறேன்.
தி.திருமால்வளவன் மு.க.
மாநில துணை பொது செயலாளர் பா.ம.க