அன்பு மாணவர்களுக்கு வணக்கம் !
கடலூர் நகரத்தில், கடலூர் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அவர்கள் அரசு பதவிகளை போட்டிதேர்வில் ஜெயித்து எளிதாக வேலை வாய்ப்பை பெறுவதற்கு ஏதுவாக கடலூர் நகரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் மிக பெரிய இலவச பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இது எந்தவித லாப நோக்கின்றி மருத்துவர் அய்யா பயிற்சி பாசறை என்கின்ற பெயரில் இனிதே செயல் பட்டு கொண்டு இருக்கின்றது. இந்த பயிற்சி வகுப்புகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்க பட்டது. முதலில் காவல் துறை இளநிலை காவலர்கள் மற்றுள் காவல் உதவி ஆய்வாளர் போட்டிக்கான வகுப்புகள் மாடர்ன் மெட்ரிக் பள்ளியில் தொடங்கப்பட்டது. இது முதன்மை பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டு 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்று பயின்றார்கள்.
இதில் ஆசிரியர்களாக மிகவும் அனுபவம் வாய்ந்த அரசு அதிரிகாரிகளால் நடத்தப்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து பல லட்சம் மதிப்புள்ள மிகப்பெரிய வகுப்பறை பல வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சம் பணம் செலவு செய்து பெரிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பான பல டிஜிட்டல் டி வி டி க்கள் சேகரிக்கப்பட்டு வீடியோ டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
அதி நவீன இன்டர்நெட் வசதிகளோடு கூடிய கணிப்பொறி மையத்தை இப்பயிற்சி பாசரைக்காக நமது மாண்புமிகு சின்ன அய்யா அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வீடியோ திரை வழியாக சிறப்பான வகுப்புகள் எடுக்கபடுகின்றன. சிறப்பான இலவச பயிற்சி புத்தகங்கள்அளித்து மாணவர்கள் நன்கு கவனிக்கப்பட்டு போட்டி தேர்வுகளை மிக எளிதாக சமாளிக்கும் வகையில் பயிற்சி கொடுக்கப்படுகிறது.
விஎஒ , காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் மத்திய, மாநில, I A S , I P S அதிகாரிகள் போன்ற பதவிகளை பெறுவதற்கு தொடர்ந்து சிறப்பாக இலவச பயிற்சி அளிக்கப்படுகின்றது. இது போன்ற எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் சமுதாய முன்னேற்ற சிந்தனையோடு செய்யப்படுகின்ற இந்த பயிற்சியை பயன் படுத்தி வாழ்கையில் முன்னேறி தம் சமுதாயமும் முன்னேற வேண்டும் என்று பாடு பட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
பயிற்சி மையம் கடலூர் போஸ்ட் ஆபீஸ் அருகில் உள்ள சூர்யப்ரியா ஓட்டல் அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் இயங்குகிறது. நமது சட்டமன்ற உறுப்பினர் திரு தி.வேல்முருகன் அவர்கள்சிறப்பு பயிற்சி வகுப்புகள் பல ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளை கொண்டு நடத்தி வருகிறார்.
படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு விளம்பரங்களைதெரிய படுத்தி வருகிறோம். இதுபோன்ற அறிய வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெற வேண்டுகிறேன்.
இப்படிக்கு
தி.திருமால்வளவன்
No comments:
Post a Comment